Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2017 ஒக்டோபர் 02 , மு.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். கொக்குவில் சந்திப் பகுதியிலுள்ள கடையொன்றினுள் நுழைந்த வாள் வெட்டுக் கும்பல், கடையிliருந்த பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்துள்ளனர்.
கொக்குவில் சந்தியிலுள்ள கடைக்கு, நேற்று (01) இரவு 8 மணியளவில், மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒன்பது பேர் கொண்ட குழுவொன்று, கடையிலிருந்த பொருட்களை அடித்து உடைத்து நாசம் செய்துள்ளனர்.
பின்னர், வெளியிலிருந்து வந்து, கடைக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெறுமதி மிக்க மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்து நொருக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு கடை உரிமையாளர் அறிவித்ததையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Jul 2025