2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கொக்குவிலில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். கொக்குவில் பிறவுண் வீதியிலுள்ள கடையொன்றினுள் புகுந்த வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் பெற்றோல் குண்டை வீசி கடை உரிமையாளரையும் தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (22) இரவு இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தாக்குதலில் உரிமையாளர் காயங்களுக்குள்ளான நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.

இதேபோன்று, நேற்று  (21) இரவும் அதேபகுதியிலுள்ள தையல் கடையொன்றில் வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .