2025 மே 17, சனிக்கிழமை

கொக்குவிலில் வீடுடைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

கொக்குவில் - பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த தளபாடங்கள், மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு  இரவு 9.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

பொற்பதி வீதியில் முதலாம் ஒழுங்கையில் உள்ள அரச உத்தியோகத்தரின் குடும்பம் வசிக்கும் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே தாக்குதலை நடத்தியதுடன், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்திவிட்டுத் தப்பிச் சென்றது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணம் - ஈச்சமோட்டை சனசமூக நிலையத்தின் ஜன்னல் கதவுகள் மற்றும் இரும்புக் கதவுகள் என்பன நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் அடித்து சேதம் ஆக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சனசமுக நிலையத்தின் தலைவரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .