2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘கொரோனாவாலேயே யாழ். விமானநிலையம் மூடப்பட்டுள்ளது’

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 30 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பீரிஸ் இவ்வாறு இன்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருந்தன அதே போர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.

தற்பொழுது ஏனைய சில விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல பலாலி விமான நிலையம் திறக்கப்படும். தற்போது பலாலி விமான நிலையத்தில் சில திருத்த வேலைகள் செய்ய வேண்டி உள்ளது குறிப்பாக ஓடுபாதை விரிவுபடுத்த வேண்டியுள்ளது.

மேலும் பல விமான சேவைகளுக்கான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் காரணமாக சற்று தாமதநிலை காணப்படுகின்றது. எனினும் அந்த வேலைகள் முடிந்த பின்னர் விரைவாக பலாலி விமான நிலையம் திறக்கப்படும்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .