2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கொரோனா: ‘ஆட்டம் முடிந்ததும் போட்டி ஏற்படும்’

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாவின் அச்சுறுத்தல் முடிவடைந்த கையோடு, உலகளாவிய ரீதியில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கடும் போட்டி ஏற்படுமெனத் தெரிவித்த வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இதில் மூல வளங்களைச் சுரண்டுவதற்கான போட்டி இடம்பெற வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று (06) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கொரோனாவின் தாக்கம் வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ச்சி அடைந்துவரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி அடையாத நாடுகள் என்று ஒட்டுமொத்த உலகத்தினதும் பொருளாதாரத்தைப் புரட்டிப்போட்டிருக்கிறது. இன்னமும் சில மாதங்களுக்கு இந்த நிலைமை தொடருமானால் நிலைமை மிகவும் மோசமடையும்” எனவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் அச்சுறுத்தல் முடிவடைந்த கையோடு, உலகளாவிய ரீதியில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கடும் போட்டி ஏற்படுமெனவும், இதில் மூல வளங்களைச் சுரண்டுவதற்கான போட்டி இடம்பெறுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும், அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X