2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கொரோனா தொற்றால் தவிசாளர் உயிரிழப்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா (வயது 76) கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு, பொதுச் சுகாதார பரிசோதகரினால்  திங்கட்கிழமை  முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானது.

அதனை அடுத்து, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, கடந்த 31ஆம் திகதி நகர சபை தவிசாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்த போதும், தமிழரசுக் கட்சியினால் அதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X