2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

கொவிட்-19 தொற்று: யாழில் நான்கு கடைகள் மூடல்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- என். ராஜ்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்படும் வங்கி கட்டடத்துக்கு வளிச்சீராக்கி (AC) பொருத்துவதற்கு வருகை தந்த தென்னிலங்கையைச் சேர்ந்தவருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நகரில் 4 கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் 32 பேர் சுயதனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்படும் வங்கி கட்டடத்துக்கு வளிச்சீராக்கி பொருத்துவதற்கு கடந்த மாதம் வருகை தந்த ஒருவருக்கு எழுதுமட்டுவாழ் வீதித் தடையில் வைத்து பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டன. அவருக்கு தொற்று உள்ளமை நேற்று முன்தினம் உறுதிப்படுத்தபட்டுள்ளது.

அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர் யாழ்ப்பாணம் நாக விகாரை விடுதியில் தங்கியிருந்தமை கண்டறியப்பட்டது.

அத்துடன், வங்கிக் கட்டட வேலைகள் நிறுத்தப்பட்டதுடன், தொழிலாளிகள் சிலர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர் சென்றதாகத் தெரிவித்த நாக விகாரைக்கு அண்மையில் உள்ள மருந்தகம் மூடப்பட்டு அங்கு பணியாற்றுபவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த நபர் சென்றிருந்தார் என்ற காரணத்தால் யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியில் உள்ள உணவகம், வைத்தியசாலை வீதியில் உள்ள ஐஸ்கிறீம் கடையுடன் கூடிய உணவகம் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன.

இவ்வாறு மூடப்பட்ட நிறுவனங்களில் உள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தபட்டு தொற்று இல்லை என அறிக்கை கிடைத்தால் திறக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .