2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘கோரிய நிதி விடுவிக்கப்படும்’

Editorial   / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன் , சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன்

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் கோரிய நிதி விடுவிக்கப்பட்டு மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்படும் என பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் வெள்ள அனர்த்தம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில், கலந்துரையாடல் இன்று (24) இடம்பெற்றது.

இதன்போது, “ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளோம், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகள் மற்றும் அவசர உதவிகள் குறித்த கலந்துரையாடப்பட்டது. மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும் அதற்கான நட்டஈடுகள் வழங்கப்படும். அதற்காக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்கள் கோருகின்ற நிதி விடுவிக்கப்படும்” என்றும்  அவர் தெரிவித்தார்.

இவ்வுதவிகள் அனைத்தும் விரைவாக வழங்குவதுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X