2025 மே 03, சனிக்கிழமை

கோர விபத்தில் 14 வயதுச்சிறுவன் பலி

Freelancer   / 2023 ஓகஸ்ட் 24 , பி.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (24) மதியம் கரணவாய் வடமேற்கு கொற்றாவத்தை கணபதி மில்லுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொற்றாவத்தை பகுதியைச் சேர்ந்த சாகித்தியன் (வயது 14) எனும் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

முல்லைத்தீவு பகுதியிலிருந்து கடந்த சில வருடங்களாக கொற்றவத்தை பகுதியில் வசிக்கும் அஜந்தன் (வயது 21) என்பவர் கை மற்றும் கால் முறிந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் வளைவு பகுதியில் திரும்பிய போது இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டதோடு, மோட்டார் சையிக்கிளும் டிப்பர் பவருக்குள் சிக்குண்டு தீ பிடித்தும் எரிந்துள்ளது. 

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X