2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

கோவிலடிக்கு பகுதி கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

எம். றொசாந்த்   / 2017 நவம்பர் 23 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.கோண்டாவில் பழனியாண்டவர் கோவிலடியை அண்மித்த பகுதியிலுள்ள கிணறிலிருந்து, சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸார் ​தெரிவித்தனர்.  

குறித்த கிணற்றில், சடலமொன்று மிதப்பதாக, பிரதேச மக்களால் பொலிஸாருக்கு நேற்று (22) இரவு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு இன்று (23) காலை வருகை தந்த பொலிஸார், குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

இன்னும் அடையாளம் காணப்படாத ஆணொரிவரின் சடலம், கடந்த நான்கு நாட்களாக, கிணற்றில் இருந்திருக்கலாம் என்று அறிகுறிகள் தென்படுவதாக​ தெரிவிவித்துள்ள பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .