2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கொக்குவில் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் அட்டகாசம்

Niroshini   / 2017 ஜனவரி 23 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
யாழ். கொக்குவில் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்டத் தாக்குதலில், நால்வர் காயமடைந்ததுடன் மருத்துவ நிலையம், வீடுகள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளன.
கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மோட்டார் சைக்கிள்களில் வந்த 15 பேர் கொண்ட குழுவினர் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
முதலில், மருத்துவ நிலையத்தை  தாக்கியவர்கள், வீதியில் சென்ற முச்சக்கரவண்டியை மறித்து தாக்கியுள்ளனர். அதன் பின்னர் அருகிலுள்ள வீட்டினுள் புகுந்து வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன் வீட்டில் இருந்தவர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அங்கிருந்துச்  செல்லும் போது மற்றுமொரு வீட்டின் படலையையும் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் வீட்டில் இருந்த பெண் உட்பட 4 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான  விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X