2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கொடிகாமத்தில் இராணுவ வதைமுகாம் இருந்தது

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கொடிகாமம் புகையிரத நிலையத்தில் 2006, 2007ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில், இராணுவ வதை முகாம் ஒன்று காணப்பட்டதாக காணாமற்போன ஒருவரின் தந்தையொருவர், காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்தார்.

மேற்படி  ஆணைக்குழுவின் சாவகச்சேரி அமர்வு, பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமையும் (01) நடைபெற்றது. இதன்போதே, மேற்படி தந்தை மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

'எனது மகன் பிடித்துச் செல்லப்பட்ட பின்னர், என்னையும் அந்த வதை முகாமுக்கு கூட்டிச் சென்று விசாரணை செய்தனர். அங்கு நிலத்தில் கூரான கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. சுற்றிவர கம்பிகள் இறுக்கப்பட்டிருந்தன.

ஒருவரை குப்புறப் படுக்கவைத்து, கைகள் மற்றும் கால்களை இழுத்துக் கம்பியில் கட்டிய பின்னர் அவர் மேல் ஏறி மிதிப்பார்கள். நான் சென்றபோது, அந்தக் கற்கள் மீது இரத்தக்கறைகள் காணப்பட்டன' என அந்த தந்தை அங்கு மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X