Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 01 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
எனது மகன் உட்பட பலர் காணாமற்போவதற்கு காரணமாகவிருந்த மூவரில் ஒருவரான மகாலிங்கம் என்பவர் சரசாலை வடக்கில் தற்போது வசித்து வருகின்றார் என கந்தசாமி பரிமளம் என்ற தாய் சாட்சியமளித்தார்.
காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், சாவகச்சேரி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, சாவகச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில் திங்கட்கிழமை (29) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் கூறியதாவது,
கந்தசாமி ஹரிகரன் என்ற எனது மகன் கொடிகாமம் சிவில் அலுவலகத்தில் கையொப்பமிடச் சென்றுவருபவர். இவ்வாறு 2008 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் கையொப்பமிடச் சென்ற வேளையில் காணாமற்போனார்.
காணாமற்போய் சில நாட்களுக்குப் பின்னர் எனது மகனை எங்கள் வீட்டுக்கு இராணுவத்தினர் கூட்டி வந்தனர். எங்கள் வீடு முழுக்கச் சோதனை செய்துவிட்டு, மீண்டும் மகனைக் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.
கொடிகாமம் சிவில் அலுவலகத்தில் சென்று கேட்டபோது. உங்கள் மகன் விடுதலைப் புலி உறுப்பினர் அதனாலேயே பிடித்துள்ளோம், தேடி வரவேண்டாம் என்றனர்.
எனது மகன் உட்பட பலர் பிடிபடுவதற்கு கொடிகாமம் சிவில் அலுவலகத்தில் நின்ற குமார, நரையன் மற்றும் மகாலிங்கம் என்பவர்களே காரணம். அவர்களில் மகாலிங்கம் என்பவர் தற்போது, சரசாலை பகுதியில் வசித்து வருகின்றார் என்றார்.
27 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago