2025 ஜூலை 05, சனிக்கிழமை

காணமல்போன சிறுமியை தேடி விசாரணைகள் ஆரம்பம்

Gavitha   / 2015 நவம்பர் 03 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

கொடிகாமம், பாலாவி வடக்கு பகுதியைச் சேர்ந்த குணரட்ணம் சஞ்சீவினி (வயது 15) என்ற சிறுமியை, ஞாயிற்றுக்கிழமை (01) மதியம் முதல் காணவில்லையென, சிறுமியின் உறவினர்களால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் தாயார், சில மாதங்களுக்கு முன்னர் குடும்பச் சண்டை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற நிலையில், சிறுமியும் அவரது சகோதரரும் தந்தையுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில், தானும் வீட்டை விட்டுச் செல்லவுள்ளதாக சிறுமி அடிக்கடி கூறி வந்துள்ளார். இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டை வீட்டுச் சென்ற சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை.

தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கொடிகாமம் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .