2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

காணமல்போனோருக்கான பணியகம் காலத்தை கடத்தும் ஒரு நடவடிக்கை

Niroshini   / 2016 ஜூலை 02 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

ஸ்ரீ லங்கா அரசாங்கத்தினால் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காணமல்போனோருக்கான பணியகம், பரணகம ஆணைக்குழு போன்று சாட்சியங்களை மாத்திரம் பதியும் ஒன்றாகவே காணப்படும். இதனால் எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை காணாமல்போனோருடைய உறவுகள் நடாத்திய கலந்துரையாடலில் கலந்துகொண்டு விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துவிட்டபோது,ம் காணாமல்போனவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பிள்ளை என தைப்பொங்கல் தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இதுவரை காணமால்போனவர்கள் உயிருடன் இருக்கினறார்களா? இல்லையா அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் ஜனாதிபதி இன்று வரை எதுவும் கூறவில்லை.

இதேவேளை, இராணுவத்திடம் கையளித்தோம் என உறவுகள் சாட்சி சொன்னாலும் கூட இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு குறித்த காணாமல் போனோருக்கான பணியகம் நியமிக்கப்படவுள்ள அலுவலகத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதுவும் ஒரு காலத்தை கடத்தும் நடவடிக்கையாகவே அமையவுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X