Administrator / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சுன்னாகம் பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றுக்குள் வெள்ளிக்கிழமை (18) தவறி வீழ்ந்த வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
கிணற்றின் மீது போடப்பட்டிருந்த வலையில் விழுந்திருந்த குப்பைகளை அகற்றிய போது வாளையா இராஜேஸ்வரி (வயது 68) என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் மரண விசாரணைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
30 minute ago
41 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
41 minute ago
48 minute ago
1 hours ago