Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 06 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக கடந்த 25 வருடங்களாக இருந்து கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட காணிகளை, துப்பரவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவர் புதன்கிழமை (06) தெரிவித்தார்.
மேலும், காணிகளை துப்பரவு செய்வதற்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து விலைக்கேள்விகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இதன் முதற்கட்டமாக பற்றைக்காடுகள், இடிபாடுகள் மற்றும் பாரிய மண் அணைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பத்திரிகை விளம்பரம் ஊடாக விலைக்கேள்விகள் கோரப்பட்டுள்ளன.
அத்துடன் விடுவிக்கப்பட்ட காணிகளை தமது செலவில் துப்பரவு செய்த காணி உரிமையாளர்களுக்கு அதற்குரிய பணம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான விலைக்கேள்விகள் கிடைக்க பெற்றதும், விடுவிக்கப்பட்ட வலி கிழக்கு, வலி வடக்கு பகுதிகளின் துப்பரவு பணிகள், எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் என்றார்.
2 hours ago
2 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
19 Jul 2025