2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் சனிக்கிழமை ஆரம்பம்

Niroshini   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு, ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (27) ஆரம்பமானது.

கோப்பாய் பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற அமர்வில் கோப்பாய், பருத்தித்துறை, கரவெட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சாட்சியமளித்தனர்.

சாட்சியம் அளிப்பதற்காக  232 பேர் அழைக்கப்பட்டிருந்த போதும், 184 பேர் தமது சாட்சியங்களை அளித்துள்ளதுடன் 50 புதிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதேவேளை, இரண்டாம் நாள் அமர்வு, வேலணை பிரதேச செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28)இடம்பெற்று வருகிறது.

இதில் சாட்சியமளிக்க, வேலணை, ஊர்காவற்துறை, காரைநகர், நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 193 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆணைக்குழுவின் மூன்றாம் நாள் அமர்வு, சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நாளை திங்கட்கிழமை (29) இடம்பெறவுள்ளது.

இதில் மருதங்கேணி மற்றும் சாவகச்சேரி பிரதேச பிரிவுகளைச் சேர்ந்த 205 பேர் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

இறுதிநாள் அமர்வு சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெறவுள்ளதுடன் சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 142 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X