Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வடமாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கானச் சங்கத்தை ஆரம்பிப்பதற்குரிய ஆரம்ப நிகழ்வு, நேற்று புதன்கிழமை (24), யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
வடமாகாணத்தில் யுத்தகாலப்பகுதியிலும் அதற்கு பின்னராக காலப்பகுதியிலும், பல்வேறு உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். அவர்களின் உறவுகளுக்கான சங்கம் ஒன்றினை ஆரம்பிக்கும் நடவடிக்கையை, வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேற்கொண்டு வருகின்றார்.
இதன் ஆரம்பமாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கிடையிலான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. உறவினர்கள், சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினை, எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடரில் பேசவேண்டிய விடயங்கள், பாதுகாப்பு, பொருளாதாரப் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்து கொள்ளப்பட்டது.
மேலும், வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும், காணாமல் போனோரின் உறவுகளை பிரதேச ரீதியாக ஒன்றிணைத்து மேற்படி சங்கத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக, அனந்தி சசதிதரன் கூறினார்.
இதன் ஆரம்ப நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஜங்கரநேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
3 minute ago
20 minute ago
41 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
20 minute ago
41 minute ago
50 minute ago