2025 ஜூலை 19, சனிக்கிழமை

காணியும் இல்லை காசும் இல்லை : எப்படி நினைவாலயம் அமைக்கவுள்ளனர்

Niroshini   / 2016 ஜனவரி 11 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமைப்பதற்கான காணியானது இன்னமும் கொள்முதல் செய்யப்படவில்லை. இந்த நினைவாலயத்தை அமைக்க அரசாங்கம் நிதியுதவி செய்யாது. அதற்கான சட்டவரையறையும் இல்லை. இவ்வாறு இருக்க நினைவாலயம் எவ்வாறு அமைக்கவுள்ளனர் என வடமாகாண சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நினைவாலய அமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை இந்த நினைவாலயத்தில் அனுஸ்டிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என நினைவாலய அமைப்புப் பணிக்குழுத் தலைவரும் வடமாகாண சபை பிரதி அவைத் தலைவருமான அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தமது நிதி ஒதுக்கீட்டில் இருந்து தலா ஒரு இலட்சம் ரூபாயை இதற்கென வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் வடமாகாண சபையில் இன்று திங்கட்கிழமை (11) நடைபெற்ற உறுப்பினர்களுக்கிடையிலான குழுக்கூட்டத்தில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டது. இதன்போதே சில உறுப்பினர்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினர்.

காணி வாங்குவதற்குரிய நடவடிக்கைகள் கூட இன்னமும் எடுக்கப்படவில்லையென அவர்கள் மேலும் கூறினர்.

வடமாகாண சபை அமர்வு நடைபெறுவதற்கு முதல் நாள் இந்த குழுக்கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X