Princiya Dixci / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், கீரிமலைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான 'கோப்பாய் கோமகன்' என்று அழைக்கபடும் கு.வன்னியசிங்கத்தின் சமாதியானது இராணுவத்தினரால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
கோமகனின் சாம்பலை வைத்து அமைக்கப்பட்ட இந்தக் கோவிலின் மேல் பகுதியில் சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டு, கவுணாவத்தை பூசகர் ஒருவர் பூசை வழிபாடுகளாற்றி வந்திருந்தார். இந்தச் சமாதியை கோமகனின் மனைவி கமலா அமைத்து வழிபாடாற்றியிருந்தார்.
கீரிமலைப் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டதையடுத்து, மேற்படி சமாதியும் கடற்படையின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றது. தற்போது காணிகள் விடுவிப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இந்தச் சமாதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தச் சமாதியின் மீது இருந்த சிவலிங்கம் அகற்றப்பட்டுள்ளது.

4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago