Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2015 நவம்பர் 12 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த்
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்தை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'கைது செய்த குமார் குணரத்தினத்தை உடன் விடுதலை செய்' என்னும் தலைப்பிட்டு இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சுவரொட்டியை முன்னிலை சோஷலிசக் கட்சி ஒட்டியுள்ளது.
இதேவேளை, முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஏற்பாட்டில் நுகேகொடையில் வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள '26ஆவது கார்த்திகை வீரர் நினைவு' தினம் தொடர்பிலும் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
'நீங்கள் மரணிக்கவில்லை' எனக்குறிப்பிட்டு, களங்கரை விளக்கின் படத்துடன் இந்தச் சுவரொட்டியானது ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல், கொழும்பு விகாரமகாதேவி திறந்த வெளியில் நடைபெறவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் 26ஆவது கார்த்திகை வீரர்கள் தின நிகழ்வு தொடர்பிலும் யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago