2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

காய்ச்சலால் ஒருவயது குழந்தை உயிரிழப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

நான்கு நாட்களாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவயது குழந்தை சிகிச்சை பலனின்றி, நேற்றுப் புதன்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக, யாழ்.போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை, தம்பலாகாம பிரதேசத்தைச் சேர்ந்த பிறதவுஸ் பாத்திமா அற்குலா என்ற ஒரு வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 15ஆம் திகதி, குறித்த குழந்தைக்கு காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தையை, பெற்றோர் கடந்த 17ஆம் திகதி இரவு ஒன்பது மணிக்கு தம்பலாகாம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தம்பலாகாம ஆதார வைத்தியசாலையில் இருந்து கடந்த 18ஆம் திகதி காலை சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றியிருந்தனர்.

குறித்த குழந்தைக்கு மேலதிக சிகிச்சைகள் தேவைபட்டதனால் திருகோணமலை வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை, பரிசோதித்த மருத்துவர்கள் குறித்த குழந்தை உயிரிழந்திருந்ததை உறுதிப்படுத்தினர்.

இக் குழந்தையின் மரண விசாரணையை, யாழ்.போதனை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, குறித்த குழந்தையின் மரணம், நிமோனியா காய்ச்சல் காரணமாக குழந்தையின் நூரையீரலில் ஏற்பட்ட கிருமி தொற்றினாலேயே ஏற்பட்டதாக மரண விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .