2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

காயா வீதிக்கு கார்ப்பற்

Menaka Mookandi   / 2016 ஜூன் 17 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தின் பண்டத்தரிப்பு பட்டிணத்திலுள்ள காயா வீதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் கார்ப்பெற் வீதியாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

பண்டத்தரிப்பு ஜே - 145 கிராமஅலுவலர் பிரிவிலுள்ள 21 வீதிகளும் போக்குவரத்து செய்ய முடியாதவாறு சேதமடைந்த நிலையில் இருப்பதாக, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரி.குமணனால் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவரின் கோரிக்கையை பரிசீலனை செய்த முதலமைச்சர், முன்னுரிமை அடிப்படையில் எந்த வீதியைப் புனரமைக்க வேண்டுமென்ற விபரத்தை அறிவிக்குமாறு உறுப்பினரைக் கேட்டுக் கொண்டமையை தொடர்ந்து 1,500 மீற்றர் நீளமான காயா வீதியைப் புனரமைத்து தருமாறு உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மேற்படி வீதியில் 950 மீற்றர் நீளமான வீதியை முதல் கட்டமாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X