2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காரைநகர் இந்துக் கல்லூரியின் பெயர் தொடர்பில் மீளாய்வு

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

காரைநகர் தியாகராஜா மகா வித்தியாலயம் வட மாகாண கல்வி அமைச்சால் காரைநகர் இந்துக் கல்லூரியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் என இணைத்தலைவர்களான மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவித்தனர்.

காரைநகர் பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் திங்கட்கிழமை (29) நடைபெற்றது. இதன்போது, பெயர் மாற்றம் செய்யப்பட்ட விடயம் விவாதிக்கப்பட்டது.

வேண்டுமென்றே இந்துக் கல்லூரி என வடமாகாண கல்வி அமைச்சு பெயர் மாற்றம் செய்துள்ளது எனவும் அதனை தொடர்ந்தும் தியாகராஜா மகா வித்தியாலயமாக பெயரை பேணுமாறும் அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, மக்களின் கோரிக்கைக்கு அமையவே, வட மாகாண கல்வி அமைச்சால் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

மேலும், பெயர் மாற்றம் தொடர்பில் வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாராஜா, மக்களிடம் கூறியதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

பெயர் மாற்றியது சரியென ஒரு சிலரும், பெயர் மாற்றக்கூடாது தொடர்ந்து பழைய பெயர் இருக்க வேண்டும் என பிறிதொரு தரப்பினரும் வாதாடியதால், பெயர் மாற்றியமை தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி மீளாய்வு செய்யப்படும் என இணைத்தலைவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X