Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நா.நவரத்தினராசா
கீரிமலை கேணிக்கு அண்மையிலுள்ள இரண்டு வீடுகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்த சிறிய கடற்படை முகாம், திங்கட்கிழமை (12) அகற்றப்பட்டு முகாம் அமைந்திருந்த வீடுகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
மேற்படி முகாம் முன்னர் 3 வீடுகளை உள்ளடக்கி அமையப் பெற்றிருந்து.
ஒரு வீடு ஏற்கெனவே உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மிகுதி 2 வீடுகளும் தொடர்ந்தும் கடற்படை முகாமாகவே இருந்தன.
தற்போது கடற்கடை முகாம் முற்றாக அகற்றப்பட்டமையால், 2 வீடுகளும் வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலர் க.ஸ்ரீமோகனனிடம் கையளிக்கப்பட்டது.
பிரதேச செயலர் மேற்படி 2 வீடுகளையும் அதன் உரிமையாளர்களிடம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago