2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

குறை நிவர்த்தி நடமாடும் சேவை

Niroshini   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வடமாகாண சபையின் திட்டத்தின் கீழ் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்கான நடமாடும் சேவை, வட மாகாண முதலமைச்சரின் வழிகாட்டல்களின் கீழ், எதிர்வரும் 1ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில், பொதுமக்கள் தங்கள் அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ், கடவுச் சீட்டுக்கள் போன்ற இன்னோரன்ன சேவைகளையும் பெற்றுக்கொள்ள ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், வடமாகாண அமைச்சுகளின் கீழ் இயங்கக்கூடிய அனைத்துத் திணைக்களங்களும் அதன் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளதால் நீண்ட கால குறைபாடுகள் இந்த நிகழ்வில் தீர்த்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு முடிவுக்கு கொண்டுவர முடியாத விடயங்கள் குறிப்பிட்ட திணைக்களங்களின் கருத்துக்கு எடுக்கப்பட்டு மிக விரைவில் அவற்றுக்கான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவையின் மூலம் பொதுமக்கள் தமது அனைத்து திணைக்களங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் ஒரே கூரையின் கீழ் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையுமென்றும் முதலமைச்சரின் அலுவலக ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X