2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குற்றச்சாட்டுக்களை விசாரிக்க கால அவகாசம்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரசன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து அறிக்கை தருவதற்கு வடமாகாண முதலமைச்சருக்கு ஒரு மாதகால அவகாசம் தரப்படும் என ஆளுங்கட்சி உறுப்பினர் ஜி.டி.லிங்கநாதன் தெரிவித்தார்.

அந்த கால எல்லைக்குள், அமைச்சர் குற்றம் செய்தவர் அல்லது குற்றமற்றவர் என்பது தெளிவுபடுத்தப்படாவிட்டால் நாங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குச் செல்வோம் என்றார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற போது, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும்8 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரiணை சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X