2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

குற்றவாளிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிப்போம்

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

காணாமற்போனோரின் உறவினர்கள், நேரடியாக குற்றஞ்சாட்டிய குற்றவாளிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தக் குற்றவாளிகள் குறித்த விடயங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கி, விதப்புரை செய்வோம் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாவகச்சேரி அமர்வு, பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் கூறுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

எமது விசாரணைகள் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில் முதற்கட்டமாக மக்களின் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுகின்றது. தொடர்ந்து அந்தக் குற்றச்சாட்டுக்களைக் கொண்டு ஜனாதிபதி விசாரணைக்குழு விசாரணை செய்யும்.

அந்தக்குழு யார் குற்றவாளிகள் எனக் கண்டறிந்து எங்களுக்கு அறிக்கை தரும். அதன் பின்னர் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு விதப்புரை செய்வோம். ஜனாதிபதி, சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்குவார் என்றார்.

'உறுதிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தனியாக அறிக்கை சமர்ப்பிக்கப்படும். குற்றச்சாட்டுக்களை 3 வகையாக பிரித்துள்ளோம். இராணுவம் மீது, விடுதலைப் புலிகள் மீது மற்றையது இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய ஆயுதக் குழுக்கள் மீது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடுகின்றது' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X