Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வெல்வநாயகம் கபிலன்
நச்சுதிரவம் அருந்திய நிலையில் குற்றுயிராய் காணப்பட்ட காதல் ஜோடி மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை (29) மதியம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்த 22,மற்றும் 23 வயதுடைய இளம் ஜோடிகளே இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்த இந்த ஜோடி யாழ்ப்பாணத்துக்கு சனிக்கிழமை (29) காலை வந்துள்ளனர். “நீண்ட நேரமாக கோட்டை பகுதியில் கதைத்துக்கொண்டிருந்த இருவரும் திடீரென மயங்கி விழுந்தனர்” என அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.
“அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கலாம்” என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்பில், முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளததாக யாழ். பொலிஸார் கூறினர்.
10 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
47 minute ago
2 hours ago