2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கால்நடைகளால் விபத்துக்கள் அதிகரிப்பு

Sudharshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற விபத்துகளுக்கு முக்கிய காரணமாக கால்நடைகள் அமைந்துள்ளதென பலராலும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

மாவட்டத்தில் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ள அதேவேளை, வீதிகளில் நடமாடும் கால்நடைகளினால் விபத்துகள் ஏற்பட்டு நாள்தோறும் மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதற்கு காரணம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இல்லாமையே என தெரிவிக்கபடுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X