Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூலை 06 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னங்குளத்தில் மூழ்கிய குடும்பஸ்தரின் சடலம், கடற்படை நீர்மூழ்கி வீரர்களின் தேடுதலின் பின்னர் இன்று புதன்கிழமை (06) காலை மீட்கப்பட்டதாக, காங்கேசன்துறை கடற்படை கட்டளைத்தளபதி றியர் அட்மிரல் பியால்.டி.சில்வா தெரிவித்தார்.
பெரியபளை பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை திருச்செல்வம் (வயது 50) என்ற குடும்பஸ்தர் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை குறித்த குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்களின் உதவியுடன் குளத்தில் தேடுதல் நடத்தப்பட்டது.
எனினும் தேடும் பணி தோல்வியில் முடிவடைந்தது.
பின்னர் காங்கேசன்துறை கடற்படையின் ஏழு பேர் கொண்ட சுழியோடிகள் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டு நேற்று (05) இரவு வரை சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 11 மணிக்கு நிறுத்தப்பட்ட தேடும் பணிகள் மீண்டும் அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
குளத்தில் முதலைகளின் போக்கு அதிகமாக காணப்பட்டதால் விசேட கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago