Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஏப்ரல் 27 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில் , சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும் , போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியதும் வந்துள்ளது.
பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் சகோதரன் தனது தங்கையை கொண்டு சென்று சேர்த்துள்ளார். பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன் , உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , இல்ல நிர்வாகத்தினரால் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் , முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது , பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் , பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் , பெண்ணின் சகோதரனே , பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும் , போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தியவேளை , சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். R
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago