2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சகோதரியின் கணக்கில் கைவைத்த பெண்ணுக்கு வலை வீச்சு

George   / 2017 ஜனவரி 22 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகோதரியின் வங்கி கணக்கில் இருந்து போலியான கையெழுத்து மற்றும் அடையாள அட்டையினை காண்பித்து 45ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்ட பெண்ணைத் தேடி தெல்லிப்பழை பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

மணற்குளம் அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த பெண்ணுக்கு சமூர்த்தி வங்கியில் இருந்து கிடைத்த பணத்தை, அளவெட்டி பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் வைப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, கடந்த டிசெம்பர் மாதம் 16ஆம் திகதி மேற்படி பெண், தனது வைப்பில் இட்ட பணத்தினை எடுப்பதற்கு சென்ற போது, 45ஆயிரம் ரூபாய் பணம்,  கணக்கிலிருந்து எடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த பெண், தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யதிருந்தார்.அதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, அவரது சகோதரியே பணத்தைப்​பெற்றுக்கொண்டமை தெரியவந்தது.

அதனையடுத்து, பெண்ணை கைதுசெய்ய முற்பட்ட போது, அவர் தலைமறைவாகியுள்ளார். அதனையடுத்து, அவரை கைதுசெய்ய நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X