2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சங்குப்பிட்டிக்கு பாதுகாப்பு வேண்டும்

Gavitha   / 2016 ஜூலை 04 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் பூநகரி பகுதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலப்பகுதியில் பெருமளவு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுற்றுலா மையமாக சங்குப்பிட்டிப் பாலப்பகுதி வளர்ந்து வருகின்றது. பொழுதுபோக்கு, புகைப்படங்கள் எடுப்பது, கடலில் நீந்துதல் ஆகிய செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இவர்களுக்குப் பாதுகாப்பற்ற தன்மை அங்கு காணப்படுகின்றது.

பாலத்தின் மேலாகப் பயணிக்கும் ஊர்திகள் வேகமாகப் பயணிப்பதன் காரணமாக, விபத்துகள் ஏற்படக் கூடிய ஆபாயநிலை காணப்படுகின்றது. இப்பகுதிக்குச் செல்பவர்கள் சுய பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதேபோன்று பூநகரி போக்குவரத்துப் பொலிஸாரும் கண்காணிப்பில் ஈடுபட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி ஊர்திகளின் வேகத்தினைக் கட்டுப்படுத்துமாறு பூநகரியின் பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X