Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, பூநகரி சங்குப்பிட்டிப் பாலப் பகுதியில் சமூகச்சீர்கேடான விடயங்கள் இடம்பெறுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த பிரதேச சபை இணைந்து செயற்படவேண்டும் என பூநகரி பிரதேச செயலர் சி.த.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார்.
இவ்விடயத்தை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளதாக கூறினார்.
சங்குப்பிட்டிப் பாலப்பகுதி ஒரு சுற்றுலா மையப்பகுதியாக மாறிவரும் நிலையில் சமூக சீர்கேடுகள் நிகழ்வதற்கான ஒரு களமாகவும் மாறிவருகின்றது. மதுபான விற்பனை, மது அருந்துதல், தகாத முறையில் நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல விடயங்கள் அங்கு இடம்பெறுகின்றன.
இது தொடர்பில் பொலிஸார் கண்காணிக்க வேண்டும் என மாவட்டச் செயலர் பொலிஸாரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
58 minute ago