2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி கிழக்கு - வெற்றிலைகேணி கடற்பரப்பில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்ளுர் மீனவர்கள் இருவர், நேற்று  (17), கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை, கடல் ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே, இவர்களைக் கைதுசெய்ததாக, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் சூரியபண்டார தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து, தடை செய்யப்பட்ட வலைகளும் பிடிக்கப்பட்ட 600 கிலோகிராம் கணவாயும் கைபெற்றப்பட்டுள்ளன.

கைதான மீனவர்கள் மேலதிக விசாரணையின் நிமித்தம், கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X