2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சட்டப்படி வந்தால் கட்டடங்களைத் தருகின்றேன்:டக்ளஸ்

George   / 2015 நவம்பர் 13 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களை நான் வைத்திருப்பதாக கூறுகின்றனர். அந்தக் கட்டடங்களை நீதிமன்றத்தின் ஊடாக கோரினால், அதனை நான் வழங்குவதற்கு தயாராகவுள்ளேன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஸ்ரீதர் திரையரங்கு எனது கட்சி அலுவலமாகவிருக்கின்றது. 1997ஆம் ஆண்டு நான் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த போது, வீரசிங்கம் மண்டபத்தை எனது கட்சி அலுவலகமாக மாற்றுவதற்கு தீர்மானித்தேன். 

எனினும், பாதுகாப்பு காரணங்கள் காரணமாக அந்த முடிவை கைவிட்டு, ஸ்ரீதர் திரையரங்கை எனது அலுவலமாக மாற்றினேன். இதனால் ஸ்ரீதர் திரையரங்கு பாதுகாக்கப்பட்டது. இல்லாது போனால் வெலிங்டன் திரையரங்கு அழிந்தது போல இதுவும் அழிந்திருக்கும் என்றார்.

2005ஆம் ஆண்டு ஸ்ரீதர் திரையரங்கை நிலஅளவை செய்ததாக அதன் உரிமையாளர் எனக் கூறப்படுபவர் சொல்கின்றார். ஆனால், நான் 1997ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையில் அங்கு இருக்கின்றேன். நான் அறியாமல் எவ்வாறு நிலஅளவை செய்திருக்க முடியும்.

ஸ்ரீதர் திரையரங்கு போல, பிற இடங்களிலுள்ள குறிப்பாக மானிப்பாய் அலுவலகம் உள்;ளிட்ட கட்டடங்களும் நீதிமன்ற உத்தரவில், உரிமையாளர் கோரினால் அவர்களுக்கு வழங்கப்படும். நான் பாவித்த அனைத்துக் கட்டடங்களுக்குமான வாடகைகள் அந்த உரிமையாளர்களுக்கு மணியோடர் மூலம் அனுப்பியிருந்தேன். அதற்கான உறுதிப்படுத்திய படிவம் என்னிடமுள்ளது என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .