2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு நடைபெற்றால் நடவடிக்கை

Niroshini   / 2016 ஜூன் 05 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு நடைபெற்றால் கிடைக்கின்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் நடவடிக்கையெடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்டச்செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவின் பனிக்கன்குளத்தில் நடைபெறும் மணல் அகழ்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பனிக்கன்குளத்தில் மாவட்டச் செயலகத்தில் சூழல் சட்ட அமுலாக்கல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, மணல் அகழ்வு நடைபெறுகின்றது. ஆனால், மாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் மணல் அகழ்வு நடைபெற்றால் அது அனுமதியுடன் நடைபெறுகின்றதா அனுமதியில்லாமல் நடைபெறுகின்றதா என ஆராய்ந்த பின்னரே நடவடிக்கையெடுக்க முடியும்.

மாவட்டச் செயலகத்துக்கு தெரியாமல் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளமுடியாது. அப்படி மேற்கொண்டால் அது சட்டவிரோத மணல் அகழ்வாகத்தான் கருதமுடியும். அதேவேளை, மரங்களை களவாக வெட்டிச்செல்லுதல் தொடர்பாக இறுக்கமான நடவடிக்கைகள் மாவட்டச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X