2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத கல் அகழ்வில் ஈடுபட்ட வாகனம் தடுத்து வைப்பு

George   / 2016 ஜூன் 24 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை, கெருடாவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை வியாழக்கிழமை (23) மாலை கைதுசெய்துள்ள குற்றத்தடுப்பு பொலிஸார், கல் அகழ்வுக்கு பயன்படுத்திய டிப்பர் வாகனம், பெக்கோ, உழவு இயந்திரங்கள் இரண்டு என்பவற்றை கைப்பற்றி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் வல்வெட்டித்துறை பகுதியினை சேர்ந்த சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கனியவளங்கள் மற்றும் சுரங்க அகழ்வு பணியகத்தின் அனுமதி இன்றி கல் அகழ்வில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

கல்லுடன் வாகனங்களை தடுத்து வைத்துள்ள பொலிஸார், சந்தேக நபர்களான சாரதிகளுக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X