Editorial / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததுடன் வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் இருந்த உடமைகளுக்கும் தீ வைத்துள்ளது.
வீட்டார் வெளியூர் சென்று இருந்த சமயம் , வீட்டில் மகன் மட்டுமே இரவு இருந்துள்ளார். அவ்வேளை வீட்டினுள் வன்முறை கும்பல் ஒன்று நுழைவதனை அவதானித்து அவர் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார்.
அதனை அடுத்து வீட்டினுள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்தியதுடன் , வீட்டில் இருந்த உடமைகளையும் அடித்து உடைத்து சேதமாக்கி தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (20 இடம்பெற்ற குறித்த தீ வைப்பு சம்பவத்தினால் சுமார் 20 இலட்ச ரூபாய்க்கும் மேல் நஷ்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
14 minute ago
40 minute ago
51 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
40 minute ago
51 minute ago
57 minute ago