Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜூன் 27 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சத்தமில்லாத ஆக்கிரமிப்பாளரென, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார்.
வட மாகாண சபை அமர்வு, சபா மண்டபத்தில், நேற்று (26) இடம்பெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்பு, வடக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் வன வளங்கள் என்ற பெயரிலும், தொல்பொருள் தளங்கள் என்ற பெயரிலும், பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் என்ற பெயரிலும் மக்கள் பயன்பாட்டுக்குரிய பல்வேறு காணிகளை அரச திணைக்களங்களுக்கு உரியதாக மாற்றியிருக்கின்றாரெனக் குற்றஞ்சாட்டிய அவர், இதுவும் ஒரு வகையான நில ஆக்கிரமிப்பே எனவும் தெரிவித்தார்.
இத்தகைய நில ஒதுக்கீடுகள் மூலம், வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றங்கள் பாதுகாக்கப்படுவதோடு, அவை கனகச்சிதமாகவும் முன்னெடுக்கப்படுகின்றனவெனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில், காணிகளை விடுவிக்கின்றோம் என்று தென்னிலங்கையில் பிரசாரம் செய்கின்ற போதிலும் அவர்கள் விடுவித்த அனைத்து காணிகளும் தனியார் காணிகளாகுமெனக் குறிப்பிட்ட அவர், அரச காணிகளை அவர்கள் விடுவித்தது கிடையாதெனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், மேலதிகமாக இராணுவத் தேவைகளுக்காக காணிகளை சுவீகரிப்பதே அவர்களது நோக்கமாகுமென, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago