2025 மே 02, வெள்ளிக்கிழமை

சந்தைகளைத் திறப்பது தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

Niroshini   / 2021 ஜனவரி 03 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை திறப்பது தொடர்பில், எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பில் ஆராயும் குழு கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக, யாழ். மாவட்டச் செயலாளர்  க. மகேசன், இன்று (03) தெரிவித்தார்.

யாழ். மாவட்ட கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், யாழ். மாவட்டத்தில், இன்று (03) வரை, 160 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றார்.

இவர்களுடன் தொடர்பை பேணியதன் அடிப்படையில், 1,305 குடும்பங்களைச் சேர்ந்த 3,736 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், யாழில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 28 பேர், வீடு திரும்பியுள்ளனர் எனவும், அவர் கூறினார்.

எனினும், யாழ் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு ஏற்ப செயற்படுவதன் மூலம், மேலும் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .