2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஒருவருக்கு கொரோனா

Niroshini   / 2021 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

தொண்டமனாறு, செல்வச் சந்நிதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமம், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்நிதியான் ஆச்சிரமத்தில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, வெள்ளிக்கிழமை (06) அன்னதானம் வழங்கப்பட்ட குற்றச்சாட்ணில்,  பொதுச் சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், அங்கு பணியாற்றுபவர்கள் மற்றும் சந்திநிதி முருகன் கோவிலை சேர்ந்தோரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் பணியாற்றும் 51 வயதுடைய ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்திநிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் செல்வச்சந்நிதி கலாமன்றத்தினால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அன்னதானம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X