Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வளாகத்தில் காதல் ஜோடிகள் உலாவி திரிவதற்கு ஆலய நிர்வாக சபையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது,
ஆலயத்துக்கு வரும் இளம் காதல் ஜோடிகள் தரிசனம் செய்த பின்னர், திரும்பிச் செல்ல வேண்டும். அதனை விடுத்து ஆலய வளாகங்களில் அமர்ந்து பொழுதைப் போக்கக்கூடாது. புனிதமான இந்தப் பிரதேசத்தில் பொழுதைப் போக்குவதைத் தவிர்த்து விடுதிகளில் அல்லது வேறு இடங்களுக்குச் சென்று பொழுதை போக்குங்கள்.
இதனை மீறிச் செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,அவர்கள் வருகை தந்த வாகனமும் பறிமுதல்செய்யப்படும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago