2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சனசமூக நிலையங்களுக்கு கஜதீபன் உதவி

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது 2017ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியுதவியின் கீழ் பருத்தித்துறை பிரதேசசபைப் பகுதிகளுக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கான உதவிகளை வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.

மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறைப்பிரதேச சபையில், நேற்று (09) இடம்பெற்ற நிகழ்வில் இந்த உதவிகள் குறித்த நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டன. திக்கம் சனசமூக நிலையம், அறிவகம் சனசமூக நிலையம் மற்றும் குரும்பகட்டி முன்பள்ளி என்பவற்றுக்கான தளபாடங்கள் மற்றும் சிறார்களுக்கான பாண்ட் வாத்திய இசைக்கருவிகள் என்பவற்றை குறித்த நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.

குறித்த நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினருடன், பருத்தித்துறை பிரதேசசபை செயலாளர் மற்றும், குறித்த சனசமூக நிலைய நிர்வாகிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X