2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’சன்னா’வின் பிறந்தநாள் கொண்டாட்டம்; 30 இளைஞர்கள் கைது

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

ஆவா குழுவின் முக்கியஸ்தர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளவரும் தற்போது பிரான்ஸில் வசித்து வருபவருமான “சன்னா” என்பவரின் பிறந்தநாளை கொண்டாடிய 30 இளைஞர்களை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கிளிநொச்சி - அக்காராயன் குளத்தை அண்டிய காட்டுப்பகுதி ஒன்றில், ஜூன் 12ஆம் திகதியன்று ஒன்றுகூடிய சில இளைஞர்கள், "சன்னா" என்ற பெயரும் அதன் அருகில் கஜேந்திரா கோடரியின் உருவமும் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டி, அவரது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அவ்விடத்தைச் பொலிஸார் சுற்றி வளைத்த போது, பலர் தப்பி சென்ற நிலையில், 30 பேரை பொலிஸார் மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை, மறுநாள் (13) கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் விளிக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X