Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 28 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் மேதின நிகழ்வு, கிளிநொச்சி நகரில் எதிர்வரும் 01ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக அமைப்பின் ஸ்தாபகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள உழைப்பாளர்கள், வேலைதேடுவோர், போரினால் பாதிக்கப்பட்டோர், பொது அமைப்புகளைச் சேர்ந்தோர், தொழிற்சங்கத்தினர், கூட்டுறவாளர், கல்வியாளர்கள் எனச் சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் மே தின நிகழ்வில் பங்கெடுத்து, எமது விடுதலைக்கான நியாயத்தை உலகறியச் செய்வோம்.
இதற்கான ஏற்பாட்டினை சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்புச் செய்துள்ளது. இதன்படி, கிளிநொச்சி நகரில் உள்ள மாவட்டக் கூட்டுறவு மண்டப வளாகத்தில் 01ஆம் திகதி மாலை 3 மணிக்கு மேதின நிகழ்வுகள் நடைபெறும்.
இலங்கை அரசாங்கம் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசனத்தின்படி இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்கு முதன்மை அளித்து, மே தினத்தை மே 07 ஆம் திகதிக்கு மாற்றியுள்ளது. இது உழைப்பாளர்களையிட்டு இந்த அரசாங்கமும் இந்தத் தேசமும் கொண்டிருக்கும் அக்கறை எந்தளவில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. மத உணர்வை முன்னிறுத்தித் தொழிலாளர் உரிமைகளையும் பொருளாதாரப் பிரச்சினையை பின்னுக்குத் தள்ளும் உபாயம் இதுவாகும். இதை நாம் ஆட்சேபிக்கிறோம்.
அதேவேளை இதை சிங்கள பௌத்தர்களுக்கு எதிரான விசயமாக யாரும் கருதவேண்டியதில்லை. இந்த நாட்டிலே அதிகமான விவசாயிகளும் தொழிலாளர்களும் சிங்கள இனத்தவர்களாகவே இருக்கின்றனர் என்பதையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஆகவே, எந்த வகையான மாற்றங்களுக்கும் இடமின்றி, நமது உழைப்பாளர்களின் உரிமைக்கான நாளை வழமையைப்போல மே 01இல் நாம் எழுச்சியுடன் முன்னெடுக்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
50 minute ago