2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘சரியாக வேலை செய்தால் பிரச்சினைகளை தீர்க்கலாம்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“அரச அலுவலகர்களாகிய நாங்கள், பொதுமக்களுக்கான சரியான சேவைகளை வழங்குவோமாக இருந்தால், கஷ்டப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவு செய்யமுடியும்” என, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். 

கிளிநொச்சி மகாதேவா சைவ சிறுவர் இல்லத்தில் நேற்று முன்தினம்​(19) ​நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“அரச சேவைகளில் பணியாற்றுகின்ற சிலர், அந்த சேவைகளை சரிவர மதிப்பதில்லை. அத்துடன், பெற்றுக்கொள்கின்ற சம்பளத்துக்கேற்ப சரியாக வேலை செய்வதில்லை. இவ்வாறு நாங்கள் எல்லோருமே சரியான முறையில் அரச சேவைகளைச் செய்வோமாக இருந்தால், உண்மையில் எங்களுக்கு மனத்திருப்தி கிடைப்பது மட்டுமல்லாமல், கஷ்டப்பட்ட மக்களுக்குச் சிறந்ததொரு சேவையைப் பெற்றுக்கொடுக்க எல்லோருக்குமே முடியும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .