2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மகஜர் கையளிப்பு

George   / 2017 ஜனவரி 22 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

சல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்குமாறு கோரி தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பொது நூலகத்துக்கு முன்பாக சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்தியத் துணைத் தூதர் கொன்சலட் ஜெனரல் என்.நடராஐனிடம், வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஐலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன், தமிழ்த் தேசியப் பண்பாட்டப் பேரவையின் தலைவர் சு.நிசாந்தன் உள்ளிட்ட பலரும் இந்த மகஐரைக் கையளித்துள்ளனர்.

”மகஐரைப் பெற்றுக் கொண்ட துணைத்தூதர், தமிழக மக்களுக்காக ஈழத் தமிழர்களின் மன உணர்வுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஐரைப் இந்திய பிரதமர் அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கிறேன்” என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X